செய்திகள் :

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மே.இ.தீவுகள்!

post image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லாத சன்ரைசர்ஸ்; தாக்குப்பிடிக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

இதற்கு முன்பாக, கடந்த 2013-2014 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன் பின், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு அந்த அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்தவுடன், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

இதையும் படிக்க: இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸின் இலக்கு இதுதான்; ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தில்லியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியிலும் நடைபெறவுள்ளது. குவாஹாட்டியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்துல் சமத் போராட்டம் வீண்: டி20 தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என வென்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. 4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அபாரமாக விளையாடி 220 ரன்கள் கு... மேலும் பார்க்க

நியூசி. அபாரம்: 220 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அபாரமாக விளையாடி 220 ரன்கள் குவித்துள்ளது. பின் ஆலன் 50, ஷெப்பர்ட் 44, பிரேஸ்வெல் 46 ரன்கள் குவித்தார்கள்.இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி விளையாடி வரு... மேலும் பார்க்க

களைகட்டும் ஐபிஎல்: ஜடேஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய தோனி!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரரன ரவீந்திர ஜடேஜாவுக்கு அந்த அணியின் மூத்த வீரரான எம். எஸ். தோனி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.இந்த புகைப்படங்களை சிஎஸ்கே அணி நிர்வாகம்... மேலும் பார்க்க

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது சிறப்பான சாதனை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக வ... மேலும் பார்க்க

ஹசன் நவாஸ் அதிவேக சதம்: 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து பாகிஸ்தான் அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹசன் நவாஸ் சதத்தால் 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்தது பாகிஸ்தான்.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட... மேலும் பார்க்க

அஸ்வின் வசிக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று அழைக்கப்படும் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கட... மேலும் பார்க்க