தமிழ்நாட்டையும், தமிழா்களையும் ஏளனம் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்: கனிமொழி குற்ற...
விஜய் சேதுபதி - பாண்டிராஜ் படத்தின் பெயர் இதுவா?
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவந்த புதிய படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உருவாகியுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே துவங்கி அண்மையில் நிறைவடைந்தது.
இதையும் படிக்க: டாக்ஸிக் வெளியீட்டுத் தேதி!
குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்தே படம் உருவாகியுள்ளதாம். விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இணையும் முதல் படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு ‘ஆகாச வீரன்’ எனப் பெயரிட்டுள்ளனராம். மேலும், அமேசான் பிரைம் ரூ. 22 கோடிக்கு ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.