நரம்பியல் நோயால் வேலையை இழந்த இளைஞர் விபரீத முடிவு - கடிதத்தை படித்த போலீஸார் அதிர்ச்சி
மும்பையில் வசிக்கும் பெங்களூரைச் சேர்ந்த நவீன் (27) என்பவரின் சகோதரி, மும்பை போலீஸாருக்கு இமெயில் மூலம் ஒரு தகவலை அனுப்பி இருந்தார்.
அதில் மும்பை வசாய் பகுதியில் வசிக்கும் தனது சகோதரனை கடந்த சில நாள்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
உடனே போலீஸார் அப்பெண் கொடுத்திருந்த நவீன் போன் நம்பர் மூலம் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்தனர். அவர் வசாய் அருகில் உள்ள காமன் என்ற இடத்தில் இருக்கும் பங்களாவில் வாடகைக்கு வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

`லைட் போடாதீர்கள், வீடு முழுக்க கார்பன் மோனோக்ஸைடு'
அந்த வீட்டிற்கு போலீஸார் சென்றபோது வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் லைட்டை போடாதீர்கள். வீட்டில் கார்பன் டை ஆக்ஸைடு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
போலீஸார் முன்னெச்சரிக்கையாக வீட்டிற்குள் சென்ற போது அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது போன்று வீடு முழுக்க கார்பன் டை ஆக்ஸைடு இருந்தது. அங்கிருந்த கார்பன் டை ஆக்ஸைடு சிலிண்டர் திறந்துவிடப்பட்டு இருந்தது.
நரம்பியல் நோயால் வேலையிழந்த விரக்தி
விஷவாயு வெளியில் செல்லக் கூடாது என்பதற்காக கார்பென்ட்டரை அழைத்து வந்து ஜன்னல் சீல் வைக்கப்பட்டு இருந்தது. அவர் விஷவாயு தாக்கி இறந்திருந்தார்.
தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அக்கடிதத்தில் தனக்கு நரம்பியல் தொடர்பாக இரண்டு நோய்கள் இருக்கிறது. அது குறித்து 12-க்கும் மேற்பட்ட டாக்டர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டேன். அதனை குணப்படுத்த முடியாது என்று கூறி யாரும் உதவவில்லை.

இதனால் வேலையும் பறிபோய்விட்டது. உடல்நிலையும் தொடர்ந்து மோசமடைந்து கொண்டே வந்தது. இதனால் மேற்கொண்டு வேலைக்குச் சென்று என்னால் வாழ முடியாது என்பதால் இம்முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தனக்கு உதவி செய்த நண்பர்கள், குடும்ப நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், தனக்கு இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks