செய்திகள் :

விருதுநகர்: தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன்; கழுத்தில் கயிறு இறுகி பலி

post image

விருதுநகரில் தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன் கழுத்தில் கயிறு இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மீசலுாரை சேர்ந்தவர்கள் பாக்கியராஜ்- முத்துலெட்சுமி தம்பதியினர். இதில் பாக்கியராஜ் டிரைவராக உள்ளார். முத்துலெட்சுமி நூறுநாள் வேலைத்திட்ட பணியாளராக வேலைசெய்து வருகிறார்.

இந்த தம்பதியருக்கு வைஷ்ணவ்(வயது 9) எனும் மகன் உள்ளார். வைஷ்ணவ், தாதம்பட்டி அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் வைஷ்ணவ், கடந்த ஒரு மாதமாக சரிவர பள்ளிக்குச் செல்லாமல் இருந்துவந்துள்ளார்.

காவல் அலுவலகம்

காலையில், பள்ளிச்சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்வதுபோல் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுவிட்டு, முத்துலெட்சுமி வேலைக்கு சென்றதும், வீட்டிற்கு திரும்ப வந்து டி.வி. பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தாய், தந்தை இருவரும் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டனர். இந்தநிலையில், வேலை முடித்து பிற்பகலுக்கு மேல் வீட்டிற்கு வந்த முத்துலெட்சுமி, கதவை திறக்க முற்பட்டுள்ளார்.

அப்போது, வீட்டுக்கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பலமுறை தட்டி பார்த்தும் கதவை யாரும் திறக்கவில்லை. இதைத்தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வைஷ்ணவ் வீட்டின் மேற்கூரையில் இரும்பு கொக்கியில் போட்டுவைத்திருந்த தொட்டில் கயிற்றில் கழுத்து இறுகிய நிலையில் உடல் அசைவற்று கிடந்துள்ளான்.

சடலம்
சடலம்

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துலெட்சுமி, வைஷ்ணவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வைஷ்ணவ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிறுவன் இறந்த தகவல் சூலக்கரை போலீஸூக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீஸார், சிறுவன் இறந்தது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸின் முதற்கட்ட விசாரணையில், 'வீட்டில் தனியாக இருந்த வைஷ்ணவ், தொட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுகி பலியானது தெரியவந்தது" என்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரம்மில் பல துண்டுகளாக கணவரின் உடல்; கொன்றுவிட்டு காதலனுடன் ஹோலி கொண்டாடிய பெண் - உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த முஸ்கான் என்ற பெண் தனது கணவர் செளரப் ரஜபுத்திற்கு தூக்க மாத்திரை கொடுத்து வெட்டி கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய ஆண் நண்பர்... மேலும் பார்க்க

நரம்பியல் நோயால் வேலையை இழந்த இளைஞர் விபரீத முடிவு - கடிதத்தை படித்த போலீஸார் அதிர்ச்சி

மும்பையில் வசிக்கும் பெங்களூரைச் சேர்ந்த நவீன் (27) என்பவரின் சகோதரி, மும்பை போலீஸாருக்கு இமெயில் மூலம் ஒரு தகவலை அனுப்பி இருந்தார். அதில் மும்பை வசாய் பகுதியில் வசிக்கும் தனது சகோதரனை கடந்த சில நாள்க... மேலும் பார்க்க

Ooty: "போலீஸ் அடித்து மிரட்டியதால் விஷம் குடித்தேன்" - கூலித்தொழிலாளரின் மரண வாக்குமூல பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவனய்யா என்கிற குமார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க விவசாயக் கூலித்தொழிலாளி.மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ள... மேலும் பார்க்க

காட்பாடி: கழுத்தில் 6 அடி நீள பாம்புடன் யாசகம் கேட்ட கும்பல்; பீதியில் ஓட்டமெடுத்த மக்கள்!

`பீதியைக் கிளப்பாம போங்க..’வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதியில், கடந்த 18-ம் தேதி இரவு பெண் உள்ளிட்ட நான்கு பேர் 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை கழுத்திலும், தோள் மீ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாணவரைக் கொன்று சடலத்தை முட்புதரில் வீசிய கும்பல்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாட பகுதியில் உள்ள முட்புதரில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.இதையடுத்து ச... மேலும் பார்க்க

சம்பள பிரச்னை, தொழிலாளர்கள் மீது கோபம்... பஸ்சிற்கு தீவைத்தவிட்டு நாடகமாடிய ஓட்டுநர்; நடந்தது என்ன?

புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹின்சேவாடி பகுதியில் தனியார் கம்பெனி தொழிலாளர்களை கம்பெனிக்கு ஏற்றிச்சென்ற மினி பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இத்தீவிபத்தில் பஸ்சின் பின் கதவு திறக்காமல் ... மேலும் பார்க்க