செய்திகள் :

சம்பள பிரச்னை, தொழிலாளர்கள் மீது கோபம்... பஸ்சிற்கு தீவைத்தவிட்டு நாடகமாடிய ஓட்டுநர்; நடந்தது என்ன?

post image

புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹின்சேவாடி பகுதியில் தனியார் கம்பெனி தொழிலாளர்களை கம்பெனிக்கு ஏற்றிச்சென்ற மினி பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இத்தீவிபத்தில் பஸ்சின் பின் கதவு திறக்காமல் போனதால் பஸ்சிலிருந்து தொழிலாளர்களால் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் தீ விபத்தில் சிக்கி 4 பேர் இறந்து போனார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் தனது இருக்கையிலிருந்து கீழே குதித்துவிட்டார். முதலில் டிரைவரின் இருக்கைக்குக் கீழேதான் தீப்பிடித்துக்கொண்டது. இத்தீவிபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பல சந்தேகப்படும்படியான பொருட்கள் பஸ்சில் கண்டுபிடிக்கப்பட்டது. தீப்பெட்டி ஒன்றும் பஸ்சில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிபத்தில் இறந்தவர்கள்

மேலும் பஸ் டிரைவர் தனது உடம்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அளவுக்கு அதிகமாக நடித்தது போன்று இருந்தது. இது போன்ற காரணங்களால் போலீஸார் பஸ் டிரைவர் ஜனார்த்தனிடம் விசாரித்தனர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. டிரைவர்தான் பஸ்சிற்கு திட்டமிட்டு தீ வைத்தது தெரிய வந்தது. தீபாவளி நேரத்தில் கம்பெனியில் மற்ற ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற போனஸ் கொடுக்காத காரணத்தால் ஜனார்த்தன் கோபத்திலிருந்தார். அதோடு அவர் வேலை செய்த கம்பெனி ஊழியர்கள் டிரைவரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டிருந்தனர். டிரைவரை காலை நேரத்தில் சரியான நேரம் சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர்.

நீரிழிவு நோயாளியான ஜனார்த்தன் இதனால் கம்பெனி ஊழியர்கள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். அதோடு கம்பெனி ஊழியர்கள் டிரைவரிடம் மற்ற வேலைகளைச் செய்யச் சொல்லி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது போன்ற காரணங்களால் கம்பெனி ஊழியர்கள் மீது ஜனார்த்தன் கடும் கோபத்தில் இருந்தார். இதனால்தான் திட்டமிட்டு எரியக்கூடிய திரவத்தை கம்பெனியில் இருந்து எடுத்து முன்கூட்டியே பஸ்சில் வைத்துக்கொண்டார்.

Murder
Murder

அதோடு ஒரு இடத்தில் டிரைவர் பஸ்சிற்கு தீயைப் பற்ற வைத்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கம்பெனி வாசலுக்கு முன்புதான் பஸ்சிற்கு தீ வைக்க ஆரம்பத்தில் ஜனார்த்தன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு சற்று முன்கூட்டியே தீ வைத்துவிட்டார். டிரைவரை கைது செய்து அவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Ooty: "போலீஸ் அடித்து மிரட்டியதால் விஷம் குடித்தேன்" - கூலித்தொழிலாளரின் மரண வாக்குமூல பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவனய்யா என்கிற குமார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க விவசாயக் கூலித்தொழிலாளி.மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ள... மேலும் பார்க்க

காட்பாடி: கழுத்தில் 6 அடி நீள பாம்புடன் யாசகம் கேட்ட கும்பல்; பீதியில் ஓட்டமெடுத்த மக்கள்!

`பீதியைக் கிளப்பாம போங்க..’வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதியில், கடந்த 18-ம் தேதி இரவு பெண் உள்ளிட்ட நான்கு பேர் 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை கழுத்திலும், தோள் மீ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாணவரைக் கொன்று சடலத்தை முட்புதரில் வீசிய கும்பல்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாட பகுதியில் உள்ள முட்புதரில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.இதையடுத்து ச... மேலும் பார்க்க

பிரிந்து சென்ற லிவ் இன் பார்ட்னரைக் கடத்தி ரூ.12 கோடி கேட்ட பெண்

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் நிகில் பார்மர் (32). ஐ.ஐ.எம். பட்டதாரியான நிகில் நிதி மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு வரை பிரீத்தி என்ற பெண்ணுடன் நான்கு ஆண்டுகள் லிவ் ... மேலும் பார்க்க

சென்னை: துப்பாக்கியால் சுட்டு ரௌடியைப் பிடித்த போலீஸ் - யார் இந்த ஐகோர்ட் மகாராஜா?

சென்னை வேளச்சேரி தரமணி இணைப்பு சாலையில் கடந்த 14-ம் தேதி வேளச்சேரி போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த வினோத் (27), சென்னை மணலியைச் ச... மேலும் பார்க்க

காரைக்குடி: நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு சென்ற ரெளடி - போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயெ வெட்டிக்கொலை

நிபந்தனை ஜாமீனில் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வெளியே வந்த ரெளடியை, ஒரு கும்பல் கொலை செய்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Murder (representational image)காரைக்குடி சேர்வார் ஊர... மேலும் பார்க்க