திருவள்ளூரில் மாணவரைக் கொன்று சடலத்தை முட்புதரில் வீசிய கும்பல்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாட பகுதியில் உள்ள முட்புதரில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்று இளைஞரின் சடலத்தை மீட்டனர். பின்னர் அவர் யாரென்று விசாரித்தனர்.

அப்போது அந்த இளைஞரின் சட்டை பாக்கெட்டில் ஆதார் கார்டு ஒன்று இருந்தது. அதில், திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் லோகேஷ் (19) என்ற விவரம் இருந்தது.
அதனால் கொலை செய்யப்பட்டவர் லோகேஷ் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். இவர் பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. அதுதொடர்பாக லோகேஷின் குடும்பத்தினருக்கும் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குத் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் திருத்தணி டி.எஸ்.பி கந்தன் ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர். அதைத் தொடர்ந்து லோகேஷின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருவலாங்காடு போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடிவருகிறார்கள்.

உடனடியாக அங்குச் சென்று விசாரித்தபோது லோகேஷை ஒரு கும்பல் வெட்டும் காட்சியும் அவரைச் சிலர் காப்பாற்றும் காட்சியும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதனால் அந்தக் கும்பல் லோகேஷைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks