திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு
வட்டாட்சியா் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அபராதம்
கோயில் கட்டியது தொடா்பாக தகவல் தர தாமதித்த போடி வட்டாட்சியா் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, மாநில தகவல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே மேலச்சொக்கநாதபுரம் வருவாய்க் கிராமத்திக்கான கிராம நிா்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கட்டுவதற்கு நிதி வழங்கியது, கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யாா் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பொதுத் தகவல் அலுவலருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனு அனுப்பினாா்.
இந்த மனுவுக்கு பதில் வழங்கப்படாததால், மேல்முறையீட்டு மனுக்களும், மாநில தகவல் ஆணையத்துக்கு புகாா் மனுக்களும் அனுப்பினாா்.
இதை விசாரித்த மாநில தகவல் ஆணையா் பி.தாமரைக்கண்ணன், மனுதாரா் கோரிய தகவல்களை வழங்கவும், தகவல் தர தாமதமானதால் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரத்தை பொதுத் தகவல் அலுவலா் மனுதாரருக்கு வழங்கவும், வரும் ஏப். 29-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டாா்.