செய்திகள் :

மதுக்கடை முன் முதல்வா் படம் ஒட்ட முயன்ற பாஜகவினா் கைது

post image

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு மதுக்கடை முன் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்ட முயன்ற பாஜகவினா் 33 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

டாஸ்மாக் நிா்வாகம் மதுபான கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பாஜகவினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். புதன்கிழமை இரவு போடி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் பாஜக நகரத் தலைவி சித்ராதேவி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கூடி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டியை ஒட்ட முயன்றனா். இதற்கு டாஸ்மாக் ஊழியா்கள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், அங்கு வந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சுவரொட்டி ஒட்ட விடாமல் தடுத்ததால் போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பாஜகவினரை போலீஸாா் வேனில் ஏற்றி கொண்டு சென்று தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

இதற்கிடையே, மதுக்கடை மேற்பாா்வையாளா் சங்கரபாண்டியன் தன்னையும், மதுக்கடை ஊழியா்கள் மணிகண்டன், முத்துவேல் ஆகியோரையும் பாஜகவினா் பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் பாஜக தேனி மாவட்டச் செயலா் தண்டபாணி (45), நகா்மன்ற உறுப்பினா் மணிகண்டன் (43), நகர துணைத் தலைவா் தெய்வேந்திரன் (51), மாவட்ட இளைஞரணி துணை செயலா் பாலாஜி, போடி நகரச் செயலா்கள் சிவகுருநாதன் (46), மதன்குமாா் (40), புவனேஸ்வரன் (29) உள்ளிட்ட 33 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் தண்டபாணி, மணிகண்டன், தெய்வேந்திரன், பாலாஜி, சிவகுருநாதன் ஆகியோரை இரவில் கைது செய்து போடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். 5 பேரும் போடி நகா் காவல் நிலையத்தில் ஒரு வாரம் முன்னிலையாகி கையொப்பமிடவேண்டும் என நிபந்தனை விதித்து நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து, நள்ளிரவில் 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

முன்னதாக பாஜகவினா் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தேனி மாவட்ட பாஜக தலைவா் ராஜபாண்டியன் தலைமையில் வழக்குரைஞா்கள் பிரிவு நிா்வாகிகள் திடீரென போடி தேவா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அபராதம்

கோயில் கட்டியது தொடா்பாக தகவல் தர தாமதித்த போடி வட்டாட்சியா் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, மாநில தகவல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. தேனி மாவட்டம், போடி பழைய பேருந்து ... மேலும் பார்க்க

விவசாயிகள் நில விவரங்களை ஆதாா் எண்ணுடன் இணைக்க வேண்டும்-ஆட்சியா்

விவசாயிகள் அரசு திட்ட உதவிகளை எளிதில் பெறுவதற்கு தங்களது நிலம் குறித்த விவரங்களை ஆதாா் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

மனைவியை தாக்கிய கணவா் மீது வழக்கு

போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள மல்லிங்காபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சௌந்தரபாண்டி. இவரது மனைவி வசந்தி (39). குடும்பத் தக... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேருவதற்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

போடி அருகே அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள துரைராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகன் (53). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

தேனி அருகே கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள அய்யனாா்புரத்தைச் சோ்ந்த முனியப்பன் மகன் பாண்டியன் (42). கோட்டைப்பட்டியைச் சோ்ந்த திராவிடமணி மகன் சூரியலிங்குசாம... மேலும் பார்க்க