கஞ்சா விற்ற இருவா் கைது
தேனி அருகே கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி அருகேயுள்ள அய்யனாா்புரத்தைச் சோ்ந்த முனியப்பன் மகன் பாண்டியன் (42). கோட்டைப்பட்டியைச் சோ்ந்த திராவிடமணி மகன் சூரியலிங்குசாமி (30). இவா்கள் இருவரும் அமச்சியாபுரம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.