செய்திகள் :

யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

post image

கூட்டணி தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

மதுரை கோவில்பாப்பாகுடியில் தொகுதி மேம்பாட்டுப் பணி சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் குறித்த கேள்விக்கு: நாங்கள் தான் எஜமானர்கள். யாருக்கும் நாங்கள் பயப்படவில்லை. எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான்.

தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

அதிமுகவை ஆளும் கட்சியாக மாற்றுவதற்கும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆவதற்கும் யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி சூசகமாக சொல்லியுள்ளார் என்று கூறினார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதக வெளியேறுகிறதா? என்ற கேள்விக்கு, பிரேமலதா மதுரையின் மருமகள் தான்.

அவரிடம் அதை கேளுங்கள் எனத் தெரிவித்தார். அதிமுக கூட்டணி கணக்குகள் குறித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கருத்து தொடர்பான கேள்விக்கு: திமுகவால் எங்கள் மீது உண்மையான அக்கறையுடன் இருக்க முடியாது. எங்களுக்கும் திமுகவுக்கும் வரப்பு தகராறெல்லாம் கிடையாது.

கொள்கை முரண்பாடு தான். நாங்கள் முன்பை விட இப்போது திடமாக இருக்கிறோம்" என்றார்.

நள்ளிரவில் பயங்கரம்... மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

மதுரை தனக்கன்குளத்தில் ரெளடி காளீஸ்வரன் என்பவர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடியான காளீஸ்வரன் மீது கொ... மேலும் பார்க்க

மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு

மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும் தொழில்முனைவோரை உ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடியாணை: உயா்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

மாநிலங்கள் உதய தினத்தை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்கள் உருவான தினத்தை ஆளுநா் மாளிகையில் நடத்தினால் மட்டும் போதாது, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா். சென்னை, கிண்டி ... மேலும் பார்க்க

கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தல்

கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளா்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா?

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் கடந்த 202... மேலும் பார்க்க