மனைவியை தாக்கிய கணவா் மீது வழக்கு
போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள மல்லிங்காபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சௌந்தரபாண்டி. இவரது மனைவி வசந்தி (39). குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இந்த நிலையில், சௌந்தரபாண்டி அடிக்கடி மனைவியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் தகராறு செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை வீட்டு முன் நின்றிருந்த வசந்தியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் சவுந்தரபாண்டி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.