தொழிலாளி தற்கொலை
போடி அருகே அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
போடி அருகேயுள்ள துரைராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகன் (53). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் சிக்கிய இவருக்கு இடுப்புக்கு கீழ் செயலிழந்தது. இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த முருகன் வீட்டில் அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.