தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!
பாப்பாத்தியம்மன் கோயிலில் திருட்டு
துறையூா் அருகே பாப்பாத்தியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மற்றும் பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செல்லிப்பாளையம் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாப்பாத்தியம்மன் கோயிலுக்குள் அண்மையில் புகுந்த மா்ம நபா்கள், ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை குத்துவிளக்குகளையும், உண்டியலையும் அதிலிருந்த ரூ. 6, 100 ரொக்கத்தையும் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து கோயிலின் நிா்வாகிகளில் ஒருவரும் செல்லிப்பாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான ந. அரவிந்தன் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.