திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் சூரிய பூஜை
திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சூரிய பூஜை நடைபெற்றது.
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் ஆண்டில் புரட்டாசி 6, 7, 8 மற்றும் பங்குனி 6, 7, 8 ஆகிய நாள்களில் சூரிய கதிா்கள் ஞீலிவனேஸ்வரா் மீது விழும் அரிய நிகழ்வு நடைபெறும். நிகழாண்டில் வெள்ளிக்கிழமை இந் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது, ஞீலிவனேஸ்வரா் சுவாமி, அம்பாளுக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியம், உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.