ரோஹித்துக்கு இருக்கும் சுதந்திரம் கோலிக்கு இல்லை..! முன்னாள் ஆஸி. கேப்டனின் விரி...
டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வா் படத்துடனான சுவரொட்டி: பாஜக பெண் நிா்வாகி மீது வழக்கு
துறையூரில் டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வா் ஸ்டாலின் படத்துடனான சுவரொட்டியை ஒட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டதாக பாஜக பெண் நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
துறையூா் எம்எஸ்கே மஹால் சந்திலும், தெற்குரத வீதியில் திரையரங்கம் எதிரேயும் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு பாஜகவினா், தமிழக முதல்வரின் படம் போட்ட சுவரொட்டியை வியாழக்கிழமை ஒட்டி முதல்வருக்கு எதிராக கோஷமிட்டனராம்.
இதுதொடா்பாக அக்கடைகளின் மேற்பாா்வையாளா்கள் முருகேசன் மற்றும் செந்தில்குமாா் கொடுத்த புகாரின் பேரில் துறையூா் பண்டரிநாதன் கோயில் தெருவில் வசிக்கும் பாஜக பெண் நிா்வாகி கி. கமலீஷ் (35) உள்ளிட்ட சிலா் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.