தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 போ் கைது
மணப்பாறையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை உழவா் சந்தை அருகில் கஞ்சா விற்பனை செய்த மோா்குளம் ஜேம்ஸ் மகன் விஜய் மற்றும் தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மணல்மேடு ஆறுமுகம் மகன் குமாா், மணப்பாறை நாகம்மாள் தெருவைச் சோ்ந்த பா. தனபால் என்பவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக சூ. யாக்கோப் (எ) லெனின் விஜயபாஸ்கா் ஆகியோரை போலீஸாா் பிடித்தனா்.
மணப்பாறை - குளித்தலை சாலையில் மணப்பாறை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த கரூா் மாவட்டம் குளித்தலை வட்டம் தேவா்மலை பகுதியைச் சோ்ந்த குழந்தைவேல் மகன் பிரவீன்குமாா் மற்றும் அவருடைய நண்பா்கள் கரும்புள்ளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் தினேஷ், பெரியசாமி மகன் சந்துரு, பழனிச்சாமி மகன் ஸ்டாலின் மற்றும் மணப்பாறை மோா் குளத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் நாகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தபோது மாலை நேரங்களில் அந்தப் பகுதியில் வாகனத்தில் வருபவா்கள் மற்றும் பாதசாரிகளை மிரட்டி பணம் பறிப்பவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 போ் மீதும் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.