செய்திகள் :

பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு! - டி.கே. சிவகுமார் பேச்சு

post image

பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிக்க | நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

கூட்டத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமார்,

"அரசியலமைப்பைக் காக்கவும் ஜனநாயகத்தைக் காக்கவும் பல்வேறு மாநிலத் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளோம். தென் மாநிலங்களின் உரிமையைக் காக்க அனைவரும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்த கூட்டம் வரலாற்றுப் போராட்டமாக இருக்கும்.

தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இன்று மத்திய அரசு துரோகம் இழைக்கிறது. இது அநியாயமானது. இதனால் தென் மாநிலங்கள் அரசியல் பிரதிநித்துவத்தை இழக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க | மணிப்பூரின் நிலை நமக்கு ஏற்படலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்படும் என்று மத்திய அரசு இதுவரை கூறவில்லை. பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் இது. கூட்டாட்சித் தத்துவம் காக்கப்பட வேண்டும். நமது உரிமைகள், அடையாளம் காக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்கான கூட்டம்தான் இது.

இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. 'மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா' என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது.

அனைவரும் ஒன்றிணைந்தது தொடக்கம்தான். ஒன்றாக இணைந்து விவாதித்தால் அது முன்னேற்றம். அதுவே ஒன்றாக வேலை செய்தால் அது வெற்றி.

மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றாகப் பயணித்து வெற்றி பெறுவோம்" என்றார்.

இதையும் படிக்க | ஹைதராபாத்தில் அடுத்த கூட்டம்! - ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைய விடமாட்டோம்! -முதல்வர் ஸ்டாலின்

சென்னை : நாடாளுமன்றத்தில் தென் மாநில மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க விடமாட்டோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு. க. ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே 3 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 29, 30, 31 ஆகிய நாள்களில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படு... மேலும் பார்க்க

மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து... மேலும் பார்க்க

தவெக பொதுக்குழு கூட்டம் - குழு அமைப்பு

மார்ச் 28ஆம் தேதி நடக்கவுள்ள தவெக பொதுக்குழு கூட்டப் பணிகளை மேற்கொள்ள அக்கட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். இன்று நடைபெறும் கூட்டம் வெறும் ந... மேலும் பார்க்க

யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

கூட்டணி தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். மதுரை கோவில்பாப்பாகுடியில் தொகுதி மேம்பாட்டுப் பணி சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்... மேலும் பார்க்க