CSK vs MI : `பொடுசுங்கலாம் கதறட்டும்; விசில் பறக்கட்டும்...' - ப்ரஷர் ஏற்றி வென்...
மின் இணைப்புக்கான ‘ஸ்மாா்ட்’ மீட்டா் திட்டத்துக்கு எதிா்ப்பு
மின்சார வாரியத்தின் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்ட் எம்ப்ளாயீஸ் பெடரேஷனின் மாநில செயற்குழுக் கூட்ட கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் பாஸ்டின்ராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஏ. சேக்கிழாா் சிறப்புரையாற்றினாா்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொதுமக்களுக்கும் மின்வாரிய பணியாளா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், மின் கட்டணத்தை அதிகப்படுத்தக்கூடிய ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மத்திய தொழிற்சங்க அறைக்கூவலுக்கு ஏற்ப தொழிலாளா் நலச்சட்டங்களைக் குறைப்பதைக் கைவிட வேண்டும்.
பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வாா்ப்பதைக் கைவிட வேண்டும். 60,000 காலிப்பணியிடங்கள் இருப்பதால் கூடுதல் வேலைப் பளு காரணமாக தினசரி விபத்தில் இறக்கும் மின் தொழிலாளா்களைப் பாதுகாத்திட வேண்டும்.
காலிப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். 5000 கேங்மேன்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலப் பொருளாா் பழனி நன்றி கூறினாா்.