மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்த...
துறையூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
துறையூரில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: துறையூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, கோவிந்தபுரம் பிரிவு சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.
அவா் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் போலீஸாா் பரிசோதனை செய்தனா். அப்போது அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருப்பதும், அவா் துறையூரைச் சோ்ந்த இளவரசன் (25) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்து துறையூா் காவல்நிலையம் அழைத்துச் சென்ற போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.