செய்திகள் :

வேலூர்: வயதான தாயைப் போதையில் கொடூரமாகத் தாக்கிய மகன்; பதைபதைக்க வைத்த வீடியோ; பின்னணி என்ன?

post image

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி அலமேலு. இவரின் மகன் அருண்குமார்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார் வேலைக்குச் செல்வதில்லை. திருமணமாகி மனைவி, இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையிலும் குடித்துவிட்டு அவர்களை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார்.

இதனால் வெறுப்படைந்த மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அருண்குமாரைப் பிரிந்து சென்றுவிட்டார். வயதான தாய் அலமேலு ஆடு, மாடுகளை வளர்த்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பச் செலவுகளைக் கவனித்து வருகிறார்.

கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள்

இந்நிலையில், தாய் என்றும் பார்க்காமல் மது குடிப்பதற்காகச் சரமாரியாக அவரைத் தாக்கி, பணம் பறித்துச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாராம் அருண்குமார்.

இந்நிலையில், வீட்டு வாசலில் மூதாட்டி அலமேலுவை மகன் அருண்குமார் கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி நெஞ்சைப் பதைபதைக்க வைத்திருக்கிறது.

மதுபோதையில் தள்ளாடிக்கொண்டே தாயின் முடியைப் பிடித்து இழுத்துத் தாக்குகிறார். கையால் ஓங்கிக் குத்துகிறார்.

கீழே தள்ளி எட்டி உதைத்தும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்.

வலி தாங்க முடியாமல் கதறி அழுத மூதாட்டி அலமேலு மகன் அருண்குமாரின் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, "அடிக்காதடா" என்று கெஞ்சுகிறார்.

விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டுக்குள் இழுத்துச் செல்கிறார். இந்த சம்பவம் தினந்தோறும் நடைபெறுவதால் அந்தப் பகுதி மக்களும் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் அருண்குமார் திருந்தவில்லை.

அதன் பிறகே இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட அருண்குமார்

ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீஸார் அருண்குமாரை இன்று (மார்ச் 24) கைது செய்தனர்.

விசாரணையில், வீட்டுக்குள் அழைத்து செல்லப்பட்ட அவரின் தாயைத் தூக்கில் தொங்கவிடுவதற்கும் முயன்றதாகத் தெரியவந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட மூதாட்டியைச் சமூக நலத்துறை மூலம் மீட்டு காப்பகத்தில் தங்க வைக்கவும் காவல்துறையினர் முடிவு செய்தனர்.

ஆனால், "ஆடு, மாடுகளை விட்டு எப்படி வர முடியும்?" என்று மூதாட்டி அலமேலு சொன்னதால், அவரையும் அவரின் கால்நடைகளையும் பராமரிக்க வேறு முயற்சிகளைக் காவல்துறை செய்து வருகிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

'இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்' - சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகள்; காரணம் என்ன?

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின் படி, 2023-24 ஆண்டில், இந்தியளவில் தமிழ்நாட்டில் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சாலை ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் 7 செயின் பறிப்புச் சம்பவங்கள்; ஒருவர் என்கவுன்டர்; மூவர் கைது; என்ன நடந்தது?

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவைச் சுமார் ஒரு மணி நேரத்தில் நடந்துள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன்‌ சென்ன... மேலும் பார்க்க

"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த குற்றத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ரீதியான மோதல்கள் உள்ளிட... மேலும் பார்க்க

மதுரை: இயக்குநர் வீட்டில் களவு; `5 நாள்களாகியும் விசாரணை இல்லை...' - காவல்துறை மீது குற்றச்சாட்டு!

எழுத்தாளரும் இயக்குநருமான லக்ஷ்மி சரவணக்குமார் தனது வீட்டில் பணம், நகை திருடப்பட்டுவிட்டதாகவும், அது குறித்து புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.தனியாக வாழும்... மேலும் பார்க்க

சிவகங்கை: பயிற்சி மருத்துவருக்குப் பாலியல் தொல்லை; நள்ளிரவு மருத்துவக் கல்லூரியில் என்ன நடந்தது?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நேற்று (மார்ச் 24) இரவு விடுதிக்குச் சென்ற பயிற்சி மருத்துவர் மீது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் `பல' செயின் பறிப்புச் சம்பவங்கள்; அலறிய வாக்கி டாக்கிகள் - சிக்கிய உபி இளைஞர்கள்!

சென்னை, திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்... மேலும் பார்க்க