செய்திகள் :

நாடாளுமன்றத்தில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைய விடமாட்டோம்! -முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை : நாடாளுமன்றத்தில் தென் மாநில மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க விடமாட்டோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு கூட்டு செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் நாடெங்கிலுமுள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து சென்னைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த ஒற்றுமையின்மூலம், இந்தியாவின் ஒன்றியத்துவத்தை ஏந்திப் பிடிப்பதற்கான நமது கூட்டு முயற்சி பிரதிபலித்துள்ளது. நியாயமான மறுசீரமைப்பு என்பதில் நாம் ஒற்றுமையுடன் நிற்கிறோம் என்பதையும் இது பிரதிபலிக்கிறது.

மேற்கண்ட இந்த இயக்கமானது, தொகுதிகள் மறுவரையறைக்கு எதிரானதல்ல. நியாயமான முறையில் அந்த செயல்பாடு அமைய வேண்டுமென்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

அந்த வகையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கையை திறம்படச் செயல்படுத்தி நமது தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களித்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படாதவாறு மறுவரையறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நமது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் - நமது குரலை, நமது உரிமைகளை, நமது எதிர்காலத்தை ஒடுக்குவதற்கான தாக்குதலாகும். அப்படியிருக்கையில், நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் நமக்கு இருக்கின்ற இப்போதைய பங்கினை எந்தச் சூழலிலும் குறைத்திட அனுமதிக்கமாட்டோம். போராடுவோம். வெல்வோம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் 6,597 படுகொலைகள்: அன்புமணி

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6,597 படுகொலைகள் சம்பவங்கள் நடந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் த... மேலும் பார்க்க

மதுரை ரெளடி கொலை: 2 தனிப்படைகள் அமைப்பு!

மதுரை ரெளடி காளீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடி காளீஸ்வரன், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்தபோது 3 பைக்களில் வ... மேலும் பார்க்க

நள்ளிரவில் பயங்கரம்... மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

மதுரை தனக்கன்குளத்தில் ரெளடி காளீஸ்வரன் என்பவர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடியான காளீஸ்வரன் மீது கொ... மேலும் பார்க்க

மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு

மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும் தொழில்முனைவோரை உ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடியாணை: உயா்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க