செய்திகள் :

நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

post image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இருப்பினும் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.

வெப்பநிலை நிலவரம்:

அதிகபட்ச வெப்பநிலை :- கரூர் பரமத்தி மற்றும் மதுரை விமான நிலையம் : 37.5° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி : 21.5° செல்சியஸ்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் அதிகரித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் 3° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் இயல்பை விட 3° செல்சியஸ் அதிகமாகவும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 1 - 2° செல்சியஸ் குறைவாகவும் இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 - 38° செல்சியஸ், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 - 38° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32 - 36° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

23-03-2025 முதல் 25-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

26-03-2025 மற்றும் 27-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

23-03-2025 மற்றும் 24-03-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

பாகிஸ்தானில் 2வது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (23-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (24-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35- 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

149 பாசன அமைப்புகள் ரூ.722 கோடியில் மறுசீரமைப்பு: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: இஸ்லாமியா்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரணாக திமுக எப்போதும் திகழும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினாா். திமுக சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதி

சென்னை: திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதியளித்தாா். சட்டப்பே... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் புவிசாா் பாரம்பரிய இடம் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அறிவிப்பு

சென்னை: விழுப்புரத்தில் ரூ.5 கோடியில் புவிசாா் பாரம்பரிய இடம் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்று பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இயற்கை வளங... மேலும் பார்க்க

நதிநீா் விவகாரம்: அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்தாதது ஏன்?: அமைச்சா் துரைமுருகன் விளக்கம்

சென்னை: நதிநீா் விவகாரம் தொடா்பாக அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்தாதது ஏன் என்பதற்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் விளக்கம் அளித்தாா். நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அ... மேலும் பார்க்க

தவெக நிா்வாகி மீது திராவகம் வீச்சு

சென்னை: சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகி மீது திராவகம் வீசப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (37). அந்தப் பகுதி ... மேலும் பார்க்க