செய்திகள் :

ஹமாஸின் மூத்த தலைவர் பலி; 6 நாள்களில் 600 பேர் உயிரிழப்பு - மீண்டும் தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்!

post image

கடந்த ஜனவரி மாதம், அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்ய ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தையால் தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டியது இஸ்ரேல் - காசா போர்.

இந்த மாதம், அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்க இருந்த சமயத்தில், சமீபத்தில் போர் நிறுத்தத்தை பின்பற்றாமல் காசா மீது தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.

`பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவில்லை' என்பதைக் காரணமாக கூறியது இஸ்ரேல். இதனால், கடந்த ஆறு நாள்களாக தொடர்ந்து வருகிறது காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதல்.

இஸ்ரேல் - காசா போர்

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸின் முக்கிய தலைவர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவியது. இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது ஹமாஸ் அமைப்பு.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஹமாஸ் மூத்த தலைவர் சலா அல்-பர்தாவில். இன்று அதிகாலையில் காசாவின் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டுமல்லாமல், இந்தத் தாக்குதலில் இவரது மனைவி மற்றும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை முதல், இஸ்ரேலால் கிட்டதட்ட 600 பாலஸ்தினீயர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு, பதிலடி கொடுக்க ஹமாஸ் தொடங்கினால், மீண்டும் இஸ்ரேல் - காசா போர் உச்சமடையும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். சவுக்கு ... மேலும் பார்க்க

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம்... மேலும் பார்க்க

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கல... மேலும் பார்க்க

Parliament: பதாகைகளை ஏந்தி எதிக்கட்சிகள் கடும் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவையிலும் - மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவையில், தொகுதி மறு சீர... மேலும் பார்க்க

மதுரை: ``இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்'' - த.வா.க வேல்முருகன் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய வெற்றிக்குமரன் தன்னுடைய அமைப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.அதில் கலந்துகொள்ள வந்திருந்... மேலும் பார்க்க

Kerala BJP: கேரள பாஜக தலைவராகும் ராஜீவ் சந்திரசேகர்; கர்நாடகா டு கேரள அரசியல் என்ட்ரி! - யார் இவர்?

கேரள மாநில பா.ஜ.க தலைவராக இருக்கும் கே.சுரேந்திரனின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநில தலைவர் பதவிக்காக மாநில நிர்வாகிகள் எம்.டி.ரமேஷ், ஷோபா சு... மேலும் பார்க்க