செய்திகள் :

Kerala BJP: கேரள பாஜக தலைவராகும் ராஜீவ் சந்திரசேகர்; கர்நாடகா டு கேரள அரசியல் என்ட்ரி! - யார் இவர்?

post image

கேரள மாநில பா.ஜ.க தலைவராக இருக்கும் கே.சுரேந்திரனின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

மாநில தலைவர் பதவிக்காக மாநில நிர்வாகிகள் எம்.டி.ரமேஷ், ஷோபா சுரேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்தனர்.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நியமிக்கப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது. டில்லி தலைமை கூறியதை அடுத்து கேரள மாநில பா.ஜ.க தலைவர் பதவிக்கு ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

எனவே கேரள மாநில பா.ஜ.க தலைவராக ராஜிவ் சந்திரசேகரை நியமித்து அறிவிப்பு இன்று (மார்ச் 24) வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது கேரள மாநில பா.ஜ.க தலைவராக உள்ள கே.சுரேந்திரன்

ராஜீவ் சந்திரசேகரின் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 1964-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் பிறந்தார். மணிப்பூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தார். பின்னர் அமெரிக்காவில் சென்று உயர் படிப்புகளை முடித்தார்.

தொழில் அதிபரான ராஜீவ் சந்திரசேகர்  2006 முதல் 2018-வரை கர்நாடகா-வில் இருந்து மேல்சபை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018-ல் முறைப்படி பா.ஜ.க-வில் இணைந்தார்.

அதன் பிறகு பா.ஜ.க சார்பில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜீவ் சந்திரசேகர் மோடியின் இரண்டாவது ஆட்சியில் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக பதவி வகித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்.பி சசிதரூருக்கு தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி கொடுத்த ராஜீ. ராஜீவ் சந்திரசேகர் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கேரள மாநில பா.ஜ.க தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ராஜீவ் சந்திரசேகர்

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பொது வாழ்வில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

தேசிய தலைவர்கள் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து அந்த பதிவை நீக்கினார். கேரளாவில் 2026-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து வலுவான மாநில தலைவர் வேண்டும் என்பதற்காக பா.ஜ.க தேசிய தலைமை ராஜீவ் சந்திரசேகரை தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கேரள பா.ஜ.க-வில் கோஷ்டிகளை ஒருங்கிணைப்பதற்காக டெல்லி அரசியலில் இருந்து ராஜிவ் சந்திரசேகரை மாநில தலைவர் ஆக்க முடிவு செய்துள்ளதாம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``ஆண்களுக்கான கேன்சர் பரிசோதனை; இனி வீட்டிலேயே செய்யலாம்'' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. அந்த வகையில், ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய கேன்சர்களில் இரண்டாவது இடம் புராஸ்ட்டேட் கேன்சருக்குத்தான். எந்த உடல் பாகத்தில் கேன்சர் வருகிறதோ, அதன் பெயராலேயே கேன்சரை குற... மேலும் பார்க்க

US: ``வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' - ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று நேற்று எச்சரித்துள்ளார். இதுக்குறித்து தனது... மேலும் பார்க்க

``தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்'' - பார்த்திபன் பேசியது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். சவுக்கு ... மேலும் பார்க்க

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம்... மேலும் பார்க்க

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கல... மேலும் பார்க்க