KKR vs RCB : `ஆளே மாறிட்டீங்களே RCB' - ஈடன் கார்டனில் கோலி & கோ செய்த OG சம்பவம்
இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்த எம்புரான்!
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. வெளியாகும் முன்பே எம்புரான் புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
முன்பதிவு தொடங்கிய நேற்று (மார்ச்.21) தொடங்கிய நிலையில் திரிசூரில் அவரது ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்ற விடியோ இணையத்தில் பேசுபொருளாகியது.
இந்நிலையில் 24 மணிநேரத்தில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த முதல் இந்தியத் திரைப்படமாக எம்புரான் சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே, முதல் ஒரு மணி நேரத்தில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.