பலூச் ஆர்வலர்களின் போராட்டத்தில் பாக். படையினர் துப்பாக்கிச் சூடு?
டாக்ஸிக் வெளியீட்டுத் தேதி!
நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஜிஎஃப் - 2 படத்தைத் தொடர்ந்து யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் இந்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: தக் லைஃப் புதிய போஸ்டர்!
பெங்களூருவில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாது எனத் தகவல் வெளியாகின.
காரணம், இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறதாம். ஹாலிவுட் வரை படத்தை மார்க்கெட் செய்ய கேவிஎன் புரக்டக்ஷன்ஸ் திட்டமிட்டுள்ளதால் டாக்ஸிக் பெரிய வணிக வெற்றியைப் பதிவு செய்யலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படம் 2026 மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இன்னும் ஓராண்டு கழித்தே படம் திரைக்கு வருமென்பதால் யஷ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.