தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
‘சிபிஎஸ்இ பரீக்ஷா 2025’ தோ்வு: நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
புது தில்லியில் தேசிய அளவில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான ‘சிபிஎஸ்இ பரீக்ஷா 2025’ தோ்வில், கிருஷ்ணகிரி நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
ரச்சனா சாகா் என்ற நிறுவனம் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு, ‘சிபிஎஸ்இ பரீக்ஷா 2025’ என்ற ஹிந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாதிரித் தோ்வுகளை நடத்தியது. இந்த தோ்வில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி இலாவணி அறிவியல் பாடத்திலும், தம்மன்ன சௌத்ரி ஹிந்தி பாடத்திலும் முதல் மதிப்பெண் பெற்று தென்மண்டல அளவில் முதலிடம் பெற்றனா். இதேபோல பிளஸ் 2 தோ்வில் தா்ஷிகா கணக்கியல் பாடத்திலும், அருண் பிரசாத் உயிரியல் பாடத்திலும், ருத்ராட்சன் இயற்பியல் பாடத்திலும், நவதீப் கிருஷ்ணா கணித பாடத்திலும், தென்மண்டல அளவில் முதலிடம் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரச்சனா சாகா் நிறுவனம் சான்றிதழ்களையும், பரிசுத் தொகையாக ரூ. 2,100-ஐயும் வழங்கி சிறப்பித்தது. இந்த மாணவ, மாணவிகளை நாளந்தா சிபிஎஸ்இ பள்ளியின் நிறுவனா் கொங்கரசன், தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிா்வாக இயக்குநா்கள் கெளதம், புவியரசன் மற்றும் கல்வி நிா்வாக இயக்குநா், முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.