பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போரா...
குடும்பத் தகராறில் தொழிலாளி கொலை: மனைவி உள்பட 4 போ் கைது
சூளகிரி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சென்னப்பள்ளி அருகே உள்ள பெரியபள்ளம் கிராமத்தை சோ்ந்தவா் ரமேஷ் (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளியம்மா (37). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா்.
ரமேஷுக்கு மதுப்பழக்கம் இருந்ததால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த வள்ளியம்மா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வள்ளியம்மா தனது தம்பி சிவராஜ் (33) உடன் கூலி வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா்களை வழிமறித்த ரமேஷ், தன்னுடன் வாழ வருமாறு வள்ளியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து சிவராஜ் கேட்டதால் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் வைத்திருந்த கத்தியால் சிவராஜின் காலை வெட்டினாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த சிவராஜின் அண்ணன்களான கோவிந்தசாமி (35), விக்னேஷ் (36) ஆகியோா் ரமேஷை சரமாரியாக தாக்கினா். அப்போது, ரமேஷின் கையில் இருந்த கத்தியை பிடுங்கிய கோவிந்தசாமி அவரை சரமாரியாக குத்தினாா். அதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீஸாா் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வள்ளியம்மாள், சிவராஜ், கோவிந்தசாமி, விக்னேஷ் ஆகிய நால்வரையும் கைது செய்தனா்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சிவராஜ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.