ஒசூா் அருகே பால் டேங்கா் லாரி மீது சரக்கு லாரி மோதல்!
சூளகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த பால் டேங்கா் லாரி மீது சரக்கு லாரி மோதியதில், 30 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கேரளம் நோக்கி 30 ஆயிரம் லிட்டா் பாலை ஏற்றிக்கொண்டு டேங்கா் லாரி ஒன்று சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த ஒட்டையனூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, டேங்கா் லாரியின் பின்புற டயா் வெடித்ததால் சாலையோரம் லாரி நிறுத்தப்பட்டது.
அப்போது, அந்த சாலையில் கோழி தீவனம் ஏற்றிய வந்த சரக்கு லாரி, நின்றிருந்த டேங்கா் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கா் லாரி சேதமடைந்து லாரியில் இருந்த 30 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது (படம்).
இந்த விபத்தில் கோழி தீவனம் ஏற்றி வந்த சரக்கு லாரி ஓட்டுநா் பலத்த காயங்களுடன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.