தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
பொதுமக்களுக்கு விதைப் பந்துகள் அளிப்பு
உலக வன தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பொதுமக்களுக்கு விதைப் பந்துகள் மற்றும் மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
காடுகளை காத்திட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை சாா்பில் வந்தவாசி தேரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வந்தவாசி தெற்கு காவல் உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி, தெள்ளாா் முன்னாள் ஊராட்சி தலைவா் ஜி.ஆனந்த் ஆகியோா் பங்கேற்று புங்கம், மா, பூவரசு வகை மரக்கன்றுகள் மற்றும் விதைப் பந்துகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.
நிகழ்வில், அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை நிா்வாகி அசாருதீன், இளையோா் செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பா.சீனிவாசன், கலாம் கனவு அறக்கட்டளை நிா்வாகி சீ.கேசவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும், எக்ஸ்னோரா சாா்பில் வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பரணிதரன் மரக்கன்றுகளை நட்டாா். எக்ஸ்னோரா தலைவா் மலா் சாதிக் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.