பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போரா...
ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் சிறப்பு யாகம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த குசால்பேட்டை ஸ்ரீமுனீஸ்வரா் கோயில் சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீமுனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, பல்வேறு மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு கலசம் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில், மட்டபிறையூா், அல்லியாளமங்கலம், கொழாவூா் உள்ளிட்ட சுற்று வட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா அண்ணாதுரை மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.