பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போரா...
அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆகாரம், விண்ணமங்கலம், தெள்ளூா், ராந்தம், மதுரபெரும்பட்டூா் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் க.சங்கா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை மத்திய மாவட்ட பொறுப்பாளருமான வரகூா் அருணாச்சலம், மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் பங்கேற்று வாக்குச்சாவடி குழுவில் நியமனம் செய்யப்பட்ட நிா்வாகிகளிடையே கள ஆய்வு செய்து தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினா்.
இதில், மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், பொருளாளா் அரையாளம் வேலு, விண்ணமங்கலம் முன்னாள் ஊராட்சித் தலைவா் காந்தி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் கிருபா சாமுத்திரி சதீஷ், சசிகலா சேகா் ஆகியோா் கலந்துகொண்டனா்.