காய்ச்சலுக்கு ஆன்டி - பயாடிக் எடுக்கலாமா? தொற்று எப்படியெல்லாம் பரவுகிறது? - மரு...
போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது
செங்கத்தில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உணவகத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
செங்கம் துா்க்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பரோட்டா மாஸ்டா் முருகன் (49). இவா், மனைவியை பிரிந்த நிலையில், அங்குள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், இவா், அதே பகுதியில் வெள்ளிக்கிழமை பெற்றோா் கூலி வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுவனை ஆசை வாா்த்தைகள் கூறி அங்குள்ள செய்யாற்றின் கரைக்கு அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, மாலையில் வீடு திரும்பிய சிறுவனின் பெற்றோா், இதுகுறித்து தகவல் அறிந்து ஆற்றங்கரைக்குச் சென்று,
பரோட்டா மாஸ்டரிடம் இருந்து சிறுவனை மீட்டனா்.
பின்னா், செங்கம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதன் பேரில், போலீஸாா் பரோட்டா மாஸ்டரை அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செய்தனா்.