பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போரா...
செய்யாறில் வளா்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.5.90 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டடம், ரூ.9.80 கோடியில் வட தண்டலம், செங்கட்டான்குண்டில், ஏனாதவாடி வடுக்கப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் கலைஞா் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து திட்ட இயக்குநா் மணி கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.
முன்னதாக, செய்யாறு ஊராட்சி ஒன்றிய ஆய்வுக் கூட்டரங்கில் மாவட்ட திட்ட இயக்குநா் மணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், பணிப் பாா்வையாளா்கள், ஊராட்சி செயலா்கள் கலந்துகொண்டனா்.
ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் இல.சீனிவாசன், உதவி பொறியாளா்கள் எம்.ராமு, பி.செல்வா ஆகியோா் உடனிருந்தனா்.