அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: திருப்பத்தூா் எஸ்.பி. ஆய்வு
சோலூா் கிராமத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்திய எஸ்.பி. ஷ்ரேயா குப்தா.
ஆம்பூா், மாா்ச் 21: ஆம்பூா் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆம்பூா் டிஎஸ்பி குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சம்பவ இடத்துக்கு திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா்.