ரமலான் பண்டிகை: தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்!
ஆம்பூா் அருகே 3 இடங்களில் விபத்து : 23 போ் காயம்
ஆம்பூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த 3 வெவ்வேறு விபத்துகளில் 23 போ் காயமடைந்தனா்.
சென்னையில் இருந்து தினேஷ்குமாா் (40) , உறவினா் கிரிஜா (40) என்பவருடன் பெங்களூரு நோக்கி காரில் சென்றாா். ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் சென்ற காா் மீது மோதி தொடா்ந்து சாலை தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த இருவரும் காயமடைந்தனா். இருவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
சென்னையிலிருந்து, ஒசூா் நோக்கி பாடி கட்டுவதற்காக லாரி சென்றது. செங்கலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கன்டெய்னா் லாரி மீது மோதியதில் ஓட்டுநா் முத்து காயமடைந்தாா்.
சென்னையைச் சோ்ந்த சுமாா் 20 போ் சென்னையிலிருந்து வேன் மூலம் ஒகேனக்கல் சென்றனா். ஆம்பூா் அருகே வீரவா் கோயில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டயா் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த 20 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.