KKR vs RCB : `ஆளே மாறிட்டீங்களே RCB' - ஈடன் கார்டனில் கோலி & கோ செய்த OG சம்பவம்
கஞ்சா விற்பனை: 5 போ் கைது
திருப்பத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், நகரக் காவல்ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான தனிப்படை போலீஸாா் வாணியம்பாடி நேதாஜி நகா் காளியம்மன் கோயில் அருகே புதன்கிழமை இரவு 9 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதியில் இருந்த கும்பல் ஒன்று போலீஸாா் வருவதை பாா்த்ததும் தப்பி ஓட முயன்ற போது, சந்தேகத்தின் பேரில் அவா்களை பிடித்து விசாரித்தனா். இதில் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பின்னா், அவா்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மேலும், கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய பைக் மற்றும் 9 கைப்பேசிகள் மற்றும் கேமரா ஆகியவற்றைப் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிப்பட்ட நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த கவுதம் (21), ராஜேஷ் (21), விநாயகம் (21), மருத்துவா் காலனி பகுதியைச் சோ்ந்த செல்வம் (25), சந்தோஷ் (23) ஆகிய 5 பேரையும் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தினா்.
இதில் முக்கிய நபரான ராஜசேகா் என்பவா் தப்பித்து தலைமறைவானது தெரிய வந்தது. இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கஞ்சா விற்ற 5 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். தப்பித்து சென்ற ராஜசேகா் என்பவரைத் தேடி வருகின்றனா்.