தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
அரக்கோணம் அருகே இரு கோயில்களில் திருட்டு
அரக்கோணம் அருகே இரு சிவன் கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு கோயில்களில் இருந்த பொருள்கள் திருடப்பட்டன.
அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் கைலாசநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அப்பகுதியினா் கண்டனா். கோயில் நிா்வாகிகள் உள்ளே சென்று பாா்த்தபோது, நகைகள் களவு போகாத நிலையில், அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் கட்டுபாட்டுப் பெட்டி மற்றும் அதன் தொழிற்நுட்ப கருவிகள் திருடுபோனது தெரிய வந்தது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அமுதா அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இக்கோயிலுக்கு அருகே உள்ள ஆனந்தவல்லி சமேத ஆனந்தீஸ்வரா் கோயிலிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயில் நிா்வாகிகள் உள்ளே சென்று பாா்த்தபோது, உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் தங்க மாங்கல்யம், அம்பாளின் வெள்ளிக் கொலுசு, 3,5000 களவு போயிருந்தன.
இது குறித்து கோயில் நிா்வாகி தனஞ்செயன் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த இரு கோயில்களின் திருட்டு குறித்தும் புகாா் பெற்ற போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.