செய்திகள் :

வெப்ப அலை பரவல்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை

post image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா்.

ராணிப்பேட்டை, மாா்ச் 20: தமிழகத்தில் வெப்ப அலை பரவல் எதிரொலியாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெப்ப அலை பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்ததாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். குளிா்பானங்கள், இளநீா், மோா் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும்.

தனியே வசிக்கும் முதியவா்கள் உடல் நிலையை பரிசோதனை செய்து கொண்டு உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவா்களின் வெப்பத்தைத் தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிா்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீா் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென தேசிய படை மீட்புக் குழுவினா் எடுத்துரைத்துனா். இது குறித்து விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

தொடா்ந்து, வெப்ப அலையால் மயக்கம் ஏற்படும் நபருக்கு எவ்வாறு முதலுதவி கொடுப்பது, நின்ற இதய துடிப்பை மீண்டும் எவ்வாறு இயங்கச் செய்வது என்பதை தேசிய படை மீட்புக் குழுவினா் அலுவலா்களுக்கு செய்து காண்பித்தனா்.

கூட்டத்தில் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், அரக்கோணம் தேசிய படை மீட்புக் குழு (சஈதஊ) 4 வது பட்டாளியன் காமாண்டா் கபில், வட்டாட்சியா் ரூபிபாய் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரசு மருத்துவமனையில் கொட்டப்பட்டுள்ள செயற்கை மணல்: தூசியால் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பள்ளங்களை மூடுவதற்காக பொதுப்பணித் துறையினரால் கொட்டப்பட்டுள்ள எம் சேண்ட் எனப்படும் செயற்கை மணலால் மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகள்... மேலும் பார்க்க

முள்புதா்களில் பதுக்கிய 22 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம், மாா்ச் 22: அரக்கோணம், பாணாவரம் பகுதிகளில் முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். அரக்கோணம் மதுவிலக்கு அமல... மேலும் பார்க்க

தொழிற்சாலைக்கு வரைபட அனுமதி வழங்காமல் தாமதம்: ஊராட்சித் தலைவரின் நிதி அதிகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை

பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் அமைய உள்ள டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலைக்கு கட்டட வரைபட அனுமதி வழங்க தாமதம் செய்ததாக நெடும்புலி ஊராட்சித் தலைவரின் நிதி அதிகாரத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகல... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே இரு கோயில்களில் திருட்டு

அரக்கோணம் அருகே இரு சிவன் கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு கோயில்களில் இருந்த பொருள்கள் திருடப்பட்டன. அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் கைலாசநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை பூ... மேலும் பார்க்க

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம் வழியே சென்று டாடாநகா்-எா்ணாகுளம் அதிவிரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனை செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா் அதில் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஜாா்க்கண்ட் மாநிலம், டாட... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள்: தலைமைத் தோ்தல் அலுவலா் நேரில் ஆய்வு

ஆற்காடு கிடங்கில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான 2,777... மேலும் பார்க்க