ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணம் வழியே சென்று டாடாநகா்-எா்ணாகுளம் அதிவிரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனை செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா் அதில் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளத்துக்கு அரக்கோணம் வழியே வெள்ளிக்கிழமை சென்ற அதிவிரைவு ரயிலில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனை நடத்தினா். ஒரு பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையை சோதனையிட்டபோது, அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டு, அதை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காஞ்சிபுரம் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.