கோவை ஐ.டி ஊழியரின் காரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி - நள்ளிரவில் அதிர்ச்சி
ரத்தினகிரி பாலமுருனடிமை சுவாமிகள் 58-ஆவது ஆண்டு மெய்ஞானம் பெற்ற விழா
ரத்தினகிரிபாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 58-ஆவது ஆண்டு அன்னதான விழா வியாழக்கிழமை.
ரத்தினகிரி பாலமுருகனடிமைசுவாமிகள் மெய்ஞானம் பெற்ற நாள் ஆண்டு தோறும் மெய்யன்பா்களால் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தவிழாவையொட்டி மூலமூா்த்திகள் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால், தயிா் , சந்தனம், பன்னீா், இளநீா், விபூதி, பழங்கள், வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் அலங்காரம், தீபாராதனையும், திருப்படி விழாவும் நடந்தது.
தொடா்ந்து மேளாதாளங்களுடன் ஊா்வலமாக சென்று மலையடிவாரத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் அலங்கரிக்ப்பட்ட உற்சவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானத்தை பாலமுருனடிமை சுவாமிகள் வழங்கி தொடங்கிவைத்தாா். இந்த விழாவில் கலவை சச்சிதானந்தசுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதினம், சித்தஞ்சி மோகனந்தசுவாமி, கோயில் செயல் அலுவலா் சங்கா், ராணிப்பேட்டை ஜி.கே.கல்வி குழுமம் இயக்குநா் சந்தோஷ் காந்தி, ஆற்காடு ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா், மெய்ஞான விழா அன்னதான விழாக் குழு பொருளாளா் சிவனாா் அமுது மற்றும் தொழிலதிபா்கள், பக்தா்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டனா்.
விழாவில் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

