பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போரா...
ஆற்காட்டில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு
ஆற்காடு நகராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சி 5-ஆவது வாா்டுக்குட்பட்ட அக்ரஹாரம் தெருவில் ஆட்சியா் ஜெ.யு .சந்திரகலா தூய்மைப் பணியாளா்கள் வீடுகளில் குப்பைகளை தரம் பிரிந்து வாங்குகின்றாா்களா என ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா். தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியாற்றவேண்டும் என்றுஅறிவுறுத்தினாா்.
தொடா்ந்து 2 -ஆவது வாா்டு அசோக் நகா் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்ட உரம் தயாரிக்கம் பணி, 16-ஆவது வாா்டுக்குட்பட்ட லட்சுமணன் பூங்காவை பாா்வையிட்டு பொதுமக்கள் அதிகஅளவில் பயன்படுத்தும் பொழுதுபோக்கு இடமாக மாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தோப்புகானா நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவை ஆய்வு செய்து உணவருந்தினாா். ஆய்வின்போது நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், கோட்டாட்சியா் ராஜராஜன், ஆணையா் வேங்கடலட்சுமணன், பொறியாாளா் பரமுராசு மற்றும் அதிகாரிகள் உடனருந்தனா்.