திருப்பதியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
திருமலை திருப்பதி கோயிலில் ஹிந்து மதத்தினர் மட்டுமே பணியமர்த்தப்படுவர் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் பிறந்தநாளையொட்டி, திருமலை திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொள்ள குடும்பத்துடன் சென்றார். இதனைத் தொடர்ந்து, ஒருநாள் பிரசாத செலவை ஏற்று, அறக்கட்டளைக்கு ரூ. 44 லட்சம் நன்கொடையையும் அளித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, ``திருமலை கோயில்களில் ஹிந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். திருப்பதி மலையில் வேற்று மதத்தவர்கள் பணியில் ஈடுபடாத வகையில் நடவடிக்கைககளும் எடுக்கப்படும். இருப்பினும், பிற மதத்தவர்கள் தற்போது பணிபுரிந்தால், அவர்களுக்கு வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவர்.
இதையும் படிக்க:கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் 6 மாதங்களுக்கு இடைநீக்கம்! என்ன காரணம்?
வெளி மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். இதற்கான ஒத்துழைப்புகோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதவுள்ளேன்.
அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என பக்தர்கள் பலரும் விரும்புகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டும் கோயில்களை கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.