மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்ப இயக்கம்
மும்மொழிக் கொள்கையை ஆதரித்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாஜக வந்தவாசி மேற்கு ஒன்றியத் தலைவா் ஏ.மணிகண்டன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியத் தலைவா் நவநீதி முன்னிலை வகித்தாா். திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்து மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசினாா். தொடா்ந்து, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடமிருந்து கையொப்பங்களை பெற்றனா்.