செய்திகள் :

தமன் இசையில் ‘இதயம் முரளி’ படத்தின் முதல் பாடல்..!

post image

அதர்வா நடித்துள்ள இதயம் முரளி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் கவனம் பெற்ற ஒருவராக நடிகர் அதர்வா முரளி இருந்து வருகிறார். தனது தந்தையின் பட்டப் பெயரான ‘இதயம் முரளி’ என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் கயாது லோஹர், பிரீத்தி முகுந்தன், ஏஞ்சலின், பிரக்யா நக்ரா என பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். அவரது இசையில் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாடலை இன்று(மர்ச் 21) மாலை 6 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று கால தாமதமாக மாலை 6.30 மணியளவில் பாடல் வெளியாகியுள்ளது.

பல்வேறு மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் அதர்வா 'பட்டத்து அரசன்' திரைப்படத்திற்குப் பிறகு தற்போது புதுமுக இயக்குநருடன் இணைந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

தணல் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர்  தயாரிக்கிறார்.

எம்புரான்: இந்திய சினிமா வரலாற்றில் சாதனை!

இந்திய சினிமா வரலாற்றில் ஒருமணி நேரத்தில் அதிகளவில் டிக்கெட்டுகள் விற்பனையான படம் என்ற புகழை எம்புரான் பெற்றது.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 2... மேலும் பார்க்க

என் அடுத்த படங்கள் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: டிராகன் இயக்குநர் கோரிக்கை!

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் அடுத்த படங்கள் குறித்து வதந்திகள் பரவிய நிலையில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன... மேலும் பார்க்க

கேலோ இந்தியா பாரா: தங்கம் வென்ற தமிழக வீரர்!

கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் பாரா கூடைப்பந்து வீரர் ரமேஷ் ஷங்குமன் தங்கம் வென்றார்.கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாவது நாளான இன்று, கூடைப்பந்து போட்டியில் தமிழக வீரர் ரம... மேலும் பார்க்க

தக் லைஃப் - முதல் பாடல் அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசனின் புதிய படமான ’தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணிய... மேலும் பார்க்க

ஆஸ்கர் வென்ற அனிமேஷன் படத்தின் 2ஆம் பாகம்..!

ஆஸ்கர் விருது வென்ற கோகோ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. 2017ஆம் ஆண்டு வெளியான ’கோகோ’ என்ற நகைச்சுவைக் கலந்த டிராமா அனிமேஷன் படத்தை லீ எட்வர்ட் உன்கிரீஷ் இயக்கியிருந்தார். டிஸ்னி, பிக்சர் சா... மேலும் பார்க்க