குழித்துறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்டல இயக்குநா் ஆய்வு
தக் லைஃப் - முதல் பாடல் அறிவிப்பு!
நடிகர் கமல்ஹாசனின் புதிய படமான ’தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.
நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க | கனிமா... ரெட்ரோ 2-வது பாடல் வெளியானது!
இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ’தக்ஸ்டர்ஸ்’ எனும் இந்தப் பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
பாடல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.