செய்திகள் :

ஆர்சிபி, கேகேஆர் பயிற்சியை பாதித்த மழை; நாளை போட்டி நடைபெறுமா?

post image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) முதல் தொடங்கவுள்ளது. நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

மழையால் பாதித்த பயிற்சி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், மழையால் அந்த அணிகளின் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது நாளை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தொடரின் முதல் போட்டிக்கான இரு அணிகளுக்குமான பயிற்சி இன்று (மார்ச் 21) மாலை 5 மணிக்கு திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், 6 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியதால் இரு அணிகளுக்குமான பயிற்சி பாதிக்கப்பட்டது. ஆடுகளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முழுவதுமாக மூடப்பட்டது.

இதையும் படிக்க: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!

வானிலை ஆய்வு மையம் சார்பில் கொல்கத்தாவுக்கு நாளை (மார்ச் 22) கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முதல் போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. விட்டு விட்டு மழை பெய்யும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும், மழையால் போட்டி நடத்த முடியாத சூழல் உருவானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.

ஐபிஎல் 2025: புதிய கேப்டன்கள்; முதல் போட்டியில் வெற்றி யாருக்கு?

18-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர்... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேசியுள்ளார்.ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்த ஐபிஎல் தொடர் நாள... மேலும் பார்க்க

300* ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளது! -இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

ஐபிஎல் தொடரில் 20 ஓவர்களில் 300 ரன்கள் அடிக்கும் வலிமை ஹைதராபாத் அணியிடம் உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கணித்துள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்க வி... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியா 100% மரியாதைக்கு தகுதியானவர்..!

ஹார்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் பலவாறு கிண்டல்களுக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து, டி20 உலகக் க... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக ஜெய்ஸ்வால் செய்ய வேண்டியதென்ன?

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் தரமான தொடக்கத்தை அளித்து வருகிறார்கள். அதனால், 23 வயதாகும் ஜெய்ஸ்வால் டெஸ்ட்டில் இடம் பிடித்தாலும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா, இ... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!

மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போன இந்திய வீரர் ஷர்துல் தாகுர் லக்னௌ அணியில் இடம்பெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை(மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்... மேலும் பார்க்க