குழித்துறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்டல இயக்குநா் ஆய்வு
மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேசியுள்ளார்.
ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) முதல் தொடங்குகிறது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக ஜெய்ஸ்வால் செய்ய வேண்டியதென்ன?
ஆரோன் ஃபின்ச் கூறியதென்ன?
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் போட்டியை வென்று கொடுக்கும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அனைத்து விஷயங்களும் மீண்டும் சரியாக அமைந்துவிட்டதாக உணர்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சில வீரர்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதையும் படிக்க:ஹார்திக் பாண்டியா 100% மரியாதைக்கு தகுதியானவர்..!
ரோஹித் சர்மாவை மறந்துவிடுங்கள், அவர் லெஜண்டரி வீரர். மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிரண்ட் போல்ட் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தால், அவர்களால் இமாலய இலக்கை குவிக்க முடியும். பந்துவீச்சை தேர்வு செய்தாலும் அந்த அணிக்கு பிரச்னை இல்லை. பந்துவீச்சில் பும்ரா மற்றும் டிரண்ட் போல்ட் இருக்கிறார்கள். அழுத்தமான சூழலில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நாளை மறுநாள் (மார்ச் 23) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் அதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.