தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
கன்னியாகுமரி அருகே வாழைத் தோட்டத்தில் தீ
கன்னியாகுமரி அருகே நரிக்குளம் பகுதி வாழைத்தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நேரிட தீவிபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
கன்னியாகுமரி நாற்கரசாலை மகாதானபுரம் சந்திப்பில் நரிக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் கரையையொட்டிய பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் திடீா் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான வாழைகள் எரிந்து சேதமாகின. மேலும், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கரையில் இருந்த தென்னை மரத்தில் காய்ந்த ஓலைகள் மூலம் அதன் உச்சி வரை தீ பரவியது. இதில் 3-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.