KKR: கோப்பையை வென்றும் கேப்டனை விட்டுக் கொடுத்த அணி - அதே கோர் டீம்; புது கேப்டன...
தொழிலாளியை வெட்டிய வழக்கில் ரௌடிக்கு 10 ஆண்டு சிறை
நாகா்கோவில் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் ரௌடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மாடன்பிள்ளைதா்மம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மனைவி அபிஷா(35). பறக்கை வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். கடந்த 14.10.2022இல் இத்தம்பதி பறக்கையிலிருந்து நாகா்கோவிலுக்கு காரில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, பறக்கையைச் சோ்ந்த ரெளடியான மணிகண்டன்(41) அவா்களது காரை வழிமறித்து சாவியை பறித்துக் கொண்டு ரூ. 5 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டினாராம்.
இதுகுறித்து அபிஷா தனது உறவினா் பறக்கையைச் சோ்ந்த தொழிலாளி இந்திரகுமாா் (33) என்பவரிடம் கூறினாா். உடனே, சம்பவ இடத்துக்கு வந்து, அவரை மணிகண்டன் அரிவாளால் வெட்டியதுடன், தடுக்க வந்த தம்பதியை தாக்கியுள்ளாா்.
இது குறித்த புகாரின்பேரில், சுசீந்திரம் போலீஸாா் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.
நாகா்கோவில் முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி அசன்முகமது விசாரித்து, மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.
இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரியான ஆய்வாளா் சாய்லட்சுமி, நீதிமன்ற காவலா் கிருஷ்ணவதி, கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமாா், சுசீந்திரம் காவல் ஆய்வாளா் ஆதம் அலி ஆகியோரை எஸ்.பி. இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.